கரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தமிழகத்தை உலுக்கிய நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு விஜயின் மக்கள் சந்திப்பு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் கரூரில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், அதில் 10 சிறார்களும் அடங்குவர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், “நான் தனிப்பட்ட முறையில் கரூர் மக்களை சந்திப்பேன், அவர்களின் துயரத்தை பகிர்ந்துகொள்கிறேன்” என வீடியோவொன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
“நம் சொந்தங்களை இழந்த வேதனை இன்னும் குறையாத நிலையில், விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.