எட்மண்டனில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
கனடாவில் எட்மண்டன் நகரில் 20 வயது இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கனடா நாட்டவர் இருவர் கைது
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு கனடா நாட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய தூதரகத்தின் இரங்கல்
இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், மாணவரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
இரு நாட்டு உறவுகளில் விரிசல்
இந்த சம்பவம், ஏற்கனவே கனடா மற்றும் இந்தியாவின் இராஜதந்திர உறவுகளில் தோன்றிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியாவை குற்றம்சாட்டிய பின்பு, இரு நாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.