Wednesday, October 8, 2025
Google search engine
Homeவானிலைதமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 4 முதல் 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை, பனிமூட்டம் மற்றும் வெப்பநிலை நிலவரம்.

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 4 முதல் 10 வரை, சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்:

  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • நகரத்தின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
  • அதிகபட்ச வெப்பநிலை 33°C; குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆக இருக்கும்.

தமிழக மக்கள் மழை காலத்திற்குத் தயார் நிலையில் இருக்க வானிலை மையம் கேட்டுக்கொள்கிறது.

இன்றைய வானிலைப் புதுப்பிப்புகளுக்காக, தினவிடியலை தொடர்ந்து பாருங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments