தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்துள்ளார். 1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு திரைப்பட நடிகராகப் புகழ்பெற்றிருந்த எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1977 தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட எம்ஜிஆரின் அதிமுக, 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.இந்நிலையில் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக இதுவரை(மாலை 6.30 மணி நிலவரம்) 34.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை ஒரு கோடி 62 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்மூலமாக எம்ஜிஆரின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தவெக மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.



