மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மும்பையில் நிருபர்கள் சந்திப்பில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவித்தார். இது 6.5 சதவீதமாகவே தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
“ரெப்போ விகிதம்” என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதமாகும். கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 6.5 சதவீதத்தில் மாற்றமின்றி நிலைக்கிறது.
கவர்னர் தாஸ் மேலும் கூறுகையில்:
- ரெப்போ விகிதத்தில் 11வது முறையாக மாற்றமில்லை.
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இதை தொடர முடிவு செய்தோம்.
- பொருளாதார வளர்ச்சியின் மீதான கவனம் காரணமாகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைப்பாடு, பணவீக்கம் மற்றும் பொருளாதார சீரமைப்பை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.