கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரூ.15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் ஆகியோருக்கு தங்கக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. ஷரீத் கைதான நிலையில் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ளார்.அவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று பெங்களூருவில் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டதாகவும், நாளை (ஜூலை 12) கேரளா கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love

Leave a Reply