பெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்

பெங்களூரு: கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் அங்கு நோய் தடுப்புநடவடிக்கைகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது .

இதனால் பெங்களூரு நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரும் ஜூலை 14 இரவு 8 மணி முதல் ஜூலை 22-ம் தேதி அதிகாலை 5 மணி வரை 8 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது மருத்துவம், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைத்தவிர பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

Spread the love

Leave a Reply