முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காய்ச்சல் மற்றும் சளி காரணமாக பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை பரிசோதித்த போது, வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதற்கு சிகிச்சை எடுக்கவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Spread the love

Leave a Reply