உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.

கோல்கட்டாவில் நடக்கும் லீக் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தால், 400 ரன்கள் குவித்து, சொற்ப ரன்களில் சுருட்ட வேண்டும். அல்லது சேஸ் செய்தால், இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.4 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும்.

ஆனால், இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ரன்களை 3 ஓவர்களுக்குள் எடுப்பதற்கு சாத்தியமே இல்லை. இப்போட்டியில் பாகிஸ்தானை 93 ரன்னில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இந்நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

Spread the love

Leave a Reply