மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் மோடி இன்று(ஜூன் 14) ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த மாநிலங்களில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும், 16, 17 ஆகிய தேதிகளில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்ப ரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

வரும், 16ல், அசாம், பஞ்சாப், கேரளா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட, 21 மாநிலங்களின் முதல்வர்களுடனும், 17ல், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மீதமுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Spread the love

Leave a Reply