இதுதான் காதலின் மொழி…

எல்லோரையும் இணைக்கும் ஒரு விஷயம் என்றால் அது அன்பு தான். மக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக தங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதில் இருந்து பூங்கொத்து கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் வரை வித்தியாசமான அணுகுமுறைகளை அவர்கள் கையாளுகிறார்கள். இதே போல் நாம் அனைவரும் காதல் அன்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறோம். அன்பை வெளிப்படுத்தும் விதம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. அப்படி வெளிப்படும் அன்பின் மொழியை எப்படி கண்டறிவது எனக் காணலாம்.

கேரி சாப்மேன் எழுதிய உங்கள் துணையிடம் இதயப்பூர்வமான காதலை எவ்வாறு வெளிப்படுத்துவது என்ற நூலின் படி காதல் மொழிகளை 5 விதமாக கூறலாம் என்கிறார்.

1.உறுதிப்படுத்தும் சொற்கள்

2.தரமான நேரத்தை கொடுத்த ல்

3.பரிசுகளை பெறுதல்

4. சேவைச் செயல்கள்

5. உடல் தொடர்பு போன்ற 5 விதமான வகைகளின் அடிப்படையில் நீங்கள் ஒருவர் மீது வைத்துள்ள காதலை நீங்கள் தெரியப்படுத்த முடியும் என்கிறார் .

காதல் மொழியின் அவசியம்

நான் சிறுவயதில் இருந்தே என் தந்தை மீது அளவுகடந்த பாசத்தை கொண்டு இருந்தேன். என் தந்தையும் என்மீது அளவு கடந்த பாசத்தை கொண்டு இருந்தார். அவர் என்னுடன் நேரம் ஒதுக்கி பேசுவார், அன்பான முத்தம், அரவணைப்பு என்று எங்கள் அன்பின் மொழிகள் எப்பொழுதுமே நீடித்து இருந்தது. நான் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தேன். இதே மாதிரி எனக்கு ஒரு பாய்பிரண்ட்டும் கிடைத்தான். என் தந்தையை மாதிரியே அவனும் என்னை மிகவும் நேசித்தான். அன்பான முத்தம், அரவணைப்பு எல்லாம் கிடைத்தது. அதே மாதிரி காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி கூட தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் பரிசுகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்புகிறார்கள். அதை நீங்கள் சரியாக வெளிப்படுத்தா சமயத்தில் உங்க காதலில் பிரச்சினைகள் எழும்புகிறது. உங்களை இம்ப்ரஸ் செய்ய அவர் எடுக்கும் முயற்சிகளை நீங்கள் பாராட்டாமல் இருந்தால் அவர் மனம் புண்படக் கூடும். எனவே உங்க காதல் மொழி சரியாகத்தான் இருக்கிறதா, நீங்கள் அதை எப்படி கண்டறிந்து புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே காண்போம்.

உங்க சொந்த காதல் மொழியை கண்டறியுங்கள்

முதலில் உங்க காதல் மொழி எந்த மாதிரியானது என்பதை கண்டறிய வேண்டும். உங்க துணையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். எனவே உங்க விருப்பத்தில் நீங்கள் குழப்பமடையாமல் இருக்க வேண்டும். நீங்கள் குழப்பம் அடைந்தால் உங்க துணையும் குழப்பமடைய வாய்ப்புள்ளது. எனவே காதலில் உங்க எதிர்ப்பார்ப்பு என்னது என்பதை உணருங்கள்.

தெளிவாக தொடர்பு கொள்ளுங்கள்

யாரும் ஒருவடைய மனதை படிப்பதில்லை. உதாரணமாக கணவர் ஆபிஸில் இருந்து தாமதமாக வரலாம். மனைவியுடன் நேரம் கழிக்க முடியாமல் போகலாம். இதனால் அவர் மனைவி மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது கணவருக்கு தெரிவதில்லை. எனவே முதலில் நீங்கள் ஏன் வருத்தமாக உள்ளீர்கள் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அதன் பிறகு இருவரும் இணைந்து இதை சரிசெய்ய முயலலாம். இனி உங்க கணவரும் சீக்கிரம் வர முயற்சி செய்வார் . உங்களுடன் நேரம் கழிக்க முற்படுவார். எனவே உங்களுக்குள் எழும் சங்கடத்தை சொல்லாமலே உங்க கணவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். எதையும் தெளிவாக சரியான நபரிடம் கூறும் போது காதல் மொழி புலப்படும்.

​சமரசம் செய்யுங்கள்

கணவன் மனைவிக்கு இடையே சமரசம் என்பது மிக முக்கியம். அதற்காக உங்களை முழுமையாக மாற்ற வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கிடையே நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் சமரசம் செய்யலாம். அதே மாதிரி உங்க துணையுடன் அதிக நேரம்

செலவு செய்யுங்கள்

Spread the love

Leave a Reply