அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்தால் எங்கள் நாட்டுக்கு வரலாம்: ட்விட்டர் நிறுவனத்தை வரவேற்கும் பிரான்சு

அமெரிக்காவில் செயல்பட சாதகமான சூழல் இல்லையென்றால், ட்விட்டர் நிறுவனம் பிரான்சுக்கு வரலாம் என பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இடுகைகள் சிலவற்றின் உண்மை நிலையை ஆராயத் தொடங்கியது.

ட்ரம்பின் இரண்டு இடுகைகளை மோசமான அளவில் தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் ட்விட்டர் தெரிவித்திருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், கடந்த வியாழன்று, சமூக ஊடகங்களுக்கெதிரான ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார்.

அத்துடன் ட்விட்டர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ட்ரம்ப், ட்விட்டர் சேவையை நிறுத்தப்போவதாகவும் அச்சுறுத்தினார்.

இந்நிலையில், பிரான்சின் டிஜிட்டல் விவகாரத்துறை அமைச்சரான Cedric O, ட்விட்டரை வரவேற்பதில் பிரான்ஸ் மிக்க மகிழ்ச்சியடையும் என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் செய்வதற்கேற்ற சூழலை விரும்பும் அமெரிக்க ஆய்வாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை வரவேற்றுள்ள Cedric O, அமெரிக்கச் சூழல் ட்விட்டர் செயலாற்ற ஏற்றதாக இல்லையெனில், அது பிரான்சுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply