புருண்டி அதிபர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக தகவல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இதன் அதிபராக இருந்து வந்தவர் பியர் நகுருன்சிசா (வயது 55). கடந்த 6-ந் தேதி இரவில் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்ப்டது.

அதைத் தொடர்ந்து கருசி மாகாணத்தில் உள்ள நாட்வே துராஷோபாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் அவரது உடல்நிலை தேறி வந்தது.

அவர் தனக்கு அருகில் இருந்தவர்களுடன் பேசி இருக்கிறார். ஆனால் 8-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு புருண்டி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 9-ந் தேதி முதல் ஒரு வார கால அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு அதிபராக இருந்து வந்தார்.

கடந்த 20-ந் தேதி நடந்த தேர்தலில் புதிய அதிபராக எவரிஸ்ட் நதைஷிமியே தேர்ந்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் பியர் நகுருன்சிசா போட்டியிட வில்லை. வரும் ஆகஸ்டு மாதம் பதவி நிறைவு பெற இருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

Spread the love

Leave a Reply