COVID-19 : கொரோனாவை Track செய்யும் Aarogya Setu ஆப்பை “சரியாக” பயன்படுத்துவது எப்படி?

ஆரோக்யா சேது ஆப்பை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, அதை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்திய அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்யா சேது ஆப் மக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் (COVID-19) வருவதற்கான அபாயத்தை சுய மதிப்பீடு செய்ய உதவுகிறது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் ஆகிய இரண்டிற்கும் கிடைக்கும் இந்த ஆப் ஆனது சாத்தியமான COVID-19 தோற்று உள்ள ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொண்டீர்களா என்பதை சரிபார்க்க உதவுகிறது. இதை சாத்தியப்படுத்த இந்த ஆப், உங்கள் தொலைபேசியின் ப்ளூடூத், லோக்கேஷன் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்துகிறது. ஒருவேளை உங்களுக்கு ஆரோக்யா சேது ஆப்பை இன்னமும் சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்றால், இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள்…

01. அதிகாரப்பூர்வ ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்!

ஆரோக்யா சேது ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது, மேலும் அந்தந்த ஆப் ஸ்டோர்ஸ் வழியாக இதை பதிவிறக்கம் செய்யலாம். ஆரோக்யா மற்றும் சேது என்கிற வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் அல்லது ஆப்பை கண்டுபிடிக்க சேர்ச் பாக்ஸில் ‘AarogyaSetu’ என்று டைப் செய்யவும்.

02. ஆரோக்யா சேது ஆப்பை திறந்து நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க!

ஆரோக்யா சேது ஆப் ஆனது ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட 11 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. அதை நிறுவிய பின், ஆப்பை திறந்து விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

03. ரிஜிஸ்டர் செய்யவும்!

குறிப்போட்ட மொழித்தேர்வை நிகழ்த்திய பின்ன இந்த கோவிட்-19 ட்ராக்கர் ஆப்பின் தகவல் பக்கத்தின் வழியாக சென்று கடைசி ஸ்லைடில் உள்ள ரிஜிஸ்டர் பட்டனை கிளிக் செய்யவும்.

04. ஆரோக்யா சேது ஆப்பிற்கு ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் தரவு தேவை. ஆக தேவையான ஆப் பெர்மிஷன்களை வழங்கவும்!

ஆரோக்யா சேது உங்கள் மொபைல் எண், ப்ளூடூத் மற்றும் இருப்பிடத் தரவை கோவிட்-19 தொற்று சார்ந்த தொடர்புகளை தடுக்ப்பதற்காக பயன்படுத்துகிறது, மேலும் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா இல்லையா என்பதையும் கணிக்கிறது.எனவே இந்த ஆப்பிற்கான தேவையான அணுகல் அனுமதிகளை வழங்கவும்.

05. உங்கள் தொலைபேசி எண்ணுடன் பதிவுசெய்து, ஆரோக்யா சேது ஆப்பை பயன்படுத்த உதவும் OTP-ஐ பெறவும்!

உங்கள் மொபைல் எண்ணை பதிவுசெய்து, அதை OTP மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகே இந்த ஆப் செயல்படுகிறது. ரிஜிஸ்டரின் போது பெயர், வயது, தொழில் மற்றும் கடந்த 30 நாட்களில் நிகழ்த்திய பயணம் பற்றிய தகவல்கள், சென்று வந்த நாடுகளின் விவரம் போன்றவைகள் கேட்கப்படுகிறது. இந்த படிவத்தை நீங்கள் தவிர்க்கலாம் என்பதையும் நினைவில் கொள்க.

Spread the love

Leave a Reply